Trending News

பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் இல்லை கல்வி இராஜாங்க.. அமைச்சர் ராதா

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை மாணவர்களில் ஆடையில் மாற்றம் கொண்டுவருவதில்லை மாணவ்களின் ஆடையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் ஆலோசனை முன்வைத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் மாற்றம் கொண்டுவர வேண்டாம் என அறிவித்ததையடுத்து  மாற்றம் கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டதாக   கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார்

சித்திர போடியின் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

ஜீவ உற்று ஆங்கிளம் அகடமியின் ஏற்பாட்டில்   டி.கோ.டபில்.யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கலந்துகொண்டு வேற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்து தொடர்ந்து உரையாற்றிய  அமைச்சர் தோட்டப்புர பாடசாலைகள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றது இந் நிலையில் பாடசாலைகளுக்கு போதுமான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது இவ்வாறான நிலையிலே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வருவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில் கட்டாயமாக இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படும்

மலேசியா நாடு உட்பட ஐரோப்பிய நாடுகளில் பாலர் பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது பாலர் பாடசாலை பற்றிய நடைபெற்ற உலக மகா நாட்டில்  இலங்கை சார்பாக நானும் கலந்துகொண்டேன் சிறுவர்கள் 6 வயது வரை பாலர் பாடசாலை கட்டாயமாக வேண்டும் என்று நானும் கையெளுத்திட்டேன் இதை அரசாங்கம் ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன் தற்போது உள்ளூராட்சி சிறுவனங்களும் ஏனைய நிறுவனங்களும் நடத்திவருகின்றமையினால் எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பில் சிந்திப்போம் என்றார்கள்  அவ்வாறு ஆகும் பட்சத்தில் தொழில்வாய்ப்புகள் கிடைப்பதுடன் சிறுவர்கள் மண வளர்ச்சியும் மேலும் மேம்படும் என்றார்  கடந்த காலங்களில் பாலர் பாடசாலைகள் இருக்கவில்லை நேரடியாக பாடசாலைக்கே செல்லவேண்டியேற்பட்டது

தற்போது பாலர் பாடசாலைகள் இயங்குவதால் சிறுவர்கள் விளையாட்டு.மன வளர்ச்சி மற்றும் சமூக அறிமுகம்  ஆகியவற்றை கற்றுகொள்ள கூடியதாகவுள்ளது 7 வயதுக்கு பின்னரே சிறுவர்களுக்கு மூளை வளர்ச்சி ஏற்படுகின்றது ஆகவே தான் அதற்கு பின்னர் பாடசாலைகளுக்கு சிறுவர் உள்வாங்கப்படுகின்றனர் என்றார்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top