Trending News

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம்

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு கல்லடியில் நிர்மாணிகக்ப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துக்கான நிரந்தர கட்டடம்  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யுனிசெப் நிறுவனத்தின் 6 மில்லியன் ரூபா நிதியுதவியில் கல்லடியில் நிருமாணிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிறோஷன் பெரேரா உத்தியோககபூர்வமாகத் திறந்துவைத்தார். இதுதொடர்பான நிகழ்வு  நேற்று மாலை இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் காலீதீன் ஹமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யுனிசெப் இலங்கைக்கான வதிவிட பிரதிநதி பௌலா புலசியா, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர்களான சீ.யோகேஸ்வரன்,ஞ.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன், அலி ஸாஹிர் மௌலானா கிழக்கு மாகாணசபை உறுப்பனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் கடந்ம மூன்று தசப்தத்திற்கும் மேலாக மட்டக்களப்பில் தனியார் கட்டடமொன்யில் இயங்கிவந்ததை குறிப்பிடத்தக்கது.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top