Trending News

தனிநபர் தகவல்களை சேகரிப்பது குறித்து ஜனாதிபதி அவதானம்

(UTV|COLOMBO) – தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், குடிவரவு குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு மற்றும் இறப்பை பதிவுசெய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் தொடர்பான தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று? ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதனூடாக நேரம், மனிதவலு மற்றும் பெருமளவு பணம் விரயமாகுவதைக் குறைக்க முடியுமெனவும், ஒரே தகவல்களை பல நிறுவனங்களில் சேகரிக்கும் முறைமையே தற்போது காணப்படுவதாகவும் அவற்றை ஒரே கட்டமைப்பினுள் கொண்டுவருவதனூடாக தாமதங்களைத் தவிர்த்து மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்க முடியுமென ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், போலியான மற்றும் மோசடி தகவல் பரிமாற்றங்களையும் இதனூடாக தவிர்க்கமுடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top