Trending News

சிறுபோகத்திற்கு தேவையான நீர் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக விநியோகம்

(UDHAYAM, COLOMBO) – சிறுபோகத்திற்கு  தேவையான நீரை மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக வழங்குவதில் எந்தத் தடங்கலும் இல்லையென்று இலங்கை மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

போவத்தென்ன நீர்த்தேக்கத்தின் மூலம் தொடர்ந்தும் மகாவலி நீர் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் வறட்சி காலநிலை நிலவுவதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மகாவலி அதிகார சபை விவசாய அமைப்புக்களுக்கும் விவசாயிகளுக்கும் மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்டியப் பகுதியில் கடந்த மழை காலத்தில் சேகரிக்கப்பட்ட மொத்த நீரின் அளவு 14 கோடி 50 இலட்சம் கன மீற்றர்களாகும்.

சிறுபோகத்தின் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக தற்போது மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கோடி கன மீற்றர்களுக்கும் அதிகமான நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பயிர்ச் செய்கைக்காக தொடர்ந்து நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. சேகரிக்கப்பட்ட நீரில் கடந்த மே மாதம் முதல் இதுவரை ஒன்பது கோடி 40 இலட்சம் கன மீற்றர் நீர் எலஹெர, மின்னேறிய, கிரித்தலை, கவுடுல்ல மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய குளங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top