Trending News

சர்வதேச மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களும், இணங்க முடியாத விடயங்களும் உள்ளடங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நைய்கல ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார். சங்கைக்குரிய தலாவே நந்தசார தேரருக்கு மாத்தறை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் மஹாசங்க நாயக்கர் பதவியை வழங்குவதற்கான உரிமைப்பத்திரத்தை வழங்கி வைப்பதற்காக இந்த வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இணங்க முடியாத விடயங்கள் தொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்படுமென அவர் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க யுத்தம் காரணமாக நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான உயிர்களை இழக்க நேரிட்டது என்றும் கூறினார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக சர்வதேச நாடுகள் தெரிவித்தன. எனினும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு வந்ததன் பின்னர், இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என தெரிவித்திருந்தார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்கமைய, அரசாங்கம் கோரிக்கை விடுத்தபடி, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை தற்போது ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்..

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top