Trending News

சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மாத்தறையில்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் இம்மாதம் 8 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார; அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தெரிவிததார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார இந்த விடயத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார மேலும் தெரிவிக்கையில்:

இந்த வைபவத்தில் 1500 பெண்கள் உட்பட பல அதிதிகள் பங்கேற்க உள்ளனர்.

மகளிர் தினத்திற்கு இணைவாக மாத்தறை மாவட்டம் முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு மாத்தறை பொலிஸ் நிலையத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்படும். இந்தப் பிரிவுக்குரிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நாட்டி வைக்கப்படும்.

இன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

பெண்களின் குரலை ஓங்கச் செய்யும் வகையில் 24 மாவட்டங்களிலும் பேரணிகளையும்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார; அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார கூறினார்.

பேரணிகளின் பிரதான நிகழ்வு அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தலைமையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இன்று காலை 9.30ற்கு ஆரம்பமாகவுள்ளது..

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top