Trending News

கல்வி இராஜாங்க அமைச்ருக்கும் எனக்கும் அரசியல் போட்டி இல்லை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டியும் கிடையாது.

சென்மேரிஸ் மத்தியகல்லூரியின் பரிசளிப்பு விழாவில் ராமேஸ்வரன் புகழராம்.

மத்திய மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்னனுக்கும் எனக்கும் எவ்வித அரசியல் போட்டிகளும் கிடையாது மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அனைத்துகும் நாங்கள் இருவரும் இனைந்தே எங்களது சேவைகளை வழங்கிவருவதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெறிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்த்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரி 98வது அகவையில் கால்பதிப்பதை முன்னிட்டு ஏற்பாடு செய்யபட்டிருந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை தெறிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட ஹட்டன் வலயகல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன்,கோட்டகல்வி பணிப்பாளர் எஸ்.துறைராஜ்,உதவி கல்வி பணிப்பாளர் டி.பி.தனபாலன் பலரும் கலந்து கொன்டனர்.

நிகழ்வில் தொடர்ந்தும் உறையாற்றிய அமைச்சர் சிலர் குறை கூறிவருகின்றனர் எனக்கும் இராஜாங்க கல்வி அமைச்சர் அவர்களுக்கும் போட்டிகள் கானபடுகின்றமையாலே மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அமைச்சிக்கு நிதி வழங்கபடுவதில்லையென கூறைகுறி வருகிறார்கள் வெளியில் பார்பவர்கள் எதுவேண்டுமானாலும் கூறலாம்.

அன்மையில் வழங்கபட்ட3000 உதவி அசிரியர்கள் நியமனத்தில் பத்தாயிரம் ருபா வேதனத்தை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது அவர்களுக்கு பத்தாயிரம் ருபா சம்பளத்தை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் ஆனால் அதற்கான நதி இதவரையிலும் மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாணஅமைச்சுக்கு வந்து கிடைக்கவில்லைஎனவும் தெறிவித்தார்.

மத்திய அரசாங்காத்திற்கு சில பொறுப்பகளும் மாகாண அமைச்சுகு சில பொறுப்புகளும் உள்ளது மத்திய அரசாங்கத்தில் அமைசார் ஒருவர் நியமிக்பட்டு அதற்கான உறுதி மொழிவழங்கபட்டுள்ளது.

மத்திய மகாணத்தில் முதன் முறையாக 700பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தினை அடுத்தவாரம் வழங்குவதற்கு அதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெறிவித்தார்.

மத்திய மகாணத்தின் கல்வி தினைக்களத்தில் அதிகாரி ஒருவரை நியமிக்கும் போதும் ஒரு அதிபரை நியமிக்கும் போதும் நான் அவர்கள் கருப்பா சிவப்பா என பார்த்து நியமிப்பதில்லை யாருக்கு திறமை இருக்கிறது யாருக்கு நிர்வாகத்ததை வழிநடத்த கூடிய ஆற்றல் இருக்கிறது என்பதினை அவதானித்தே அவாகளை நியமிப்பதாகவும் அவர் தெறிவித்தார்.

இதேவேலை நியமிக்கபடும் அதிகாரிகளுக்கு கேட்டு கொள்வதெல்லாம் எங்கள் சமுகத்திற்கு தேவையானது கல்வி வளர்ச்சி எனவே வேண்டுகோளுக்கு இனங்க மத்திய மாகணத்தில் உள்ள அதிபர்களும் அதிகாரிகளும் சிறப்பாக தமது சேவையினை ஆற்றிவருவதை என்னால் அவதானிக்ககூடியாக உள்ளது எனவும் தெறிவித்தார்.
நோட்டன்பிரீஜ் நிருபர் இராமசந்திரன்

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top