Trending News

இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக $167.2 மில்லியன் நிதி உதவி

(UDHAYAM, COLOMBO) – விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) எனும் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் கீழ் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 03ம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி அந்தக் கடனுதவியின் இரண்டாம் கட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவினால் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கடன் உதவி, 3 வருடத்தில், 6 கட்டங்களாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம், 1.5 – 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை, நாட்டின் பொருளதார மீட்சிக்கான உதவியாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்ப்பார்த்துள்ளதோடு, அதனை இரு தரப்பு மற்றும் பல்தரப்பு கடன் திட்டங்கள் மூலம், சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக உறுதியளித்திருந்தது.

குறித்த கடன் உதவியை பெறுவதற்கு, இலங்கை பின்வரும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என நாணய நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(I) நிதி ஒருங்கிணைப்பு.

(Ii) வருவாய் திரட்டல்.

(Iii) பொது நிதி நிர்வாக சீர்திருத்தம்.

(Iv) அரச நிறுவன சீர்திருத்தம்.

(V) நெகிழ்வான பணவீக்க வீதத்தின் கீழ் நெகிழ்வான பணவீக்க இலக்குகளை மாற்றுவது.

(Vi) வர்த்தக மற்றும் முதலீட்டில் சீர்திருத்தங்கள்.

இலங்கை, கடந்த 1950 (ஓகஸ்ட் 29) முதல், சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்துவம் வகித்து வருகின்றது.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top