வகைப்படுத்தப்படாத

முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாணத்தில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை காவல்துறையினரும்,  இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின்போது அவர்கள் கைதுசெய்ப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 42 பேரும், நுகேகொடையில் 35 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹாவில் 25 பேரும், களனியில் 27 பேரும், நீர்கொழும்பில் 13 பேரும், கல்கிஸ்ஸையில் 6 பேரும், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குப்பை முகாமைத்துவம் தொடர்பாக எதிர்காலத்தில் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த உள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் ஹிசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

Related posts

President renews essential service order for railways

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்லியம்சன் பதவி நீக்கம்

பிரதான வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்