வகைப்படுத்தப்படாத

பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO)-பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளிவ் குணதாச இதனை எமது செய்தி சேவையிடம் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்ட 15 அறிக்கைகள் இதன்போது கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் நாளைய தினம் சிறப்பு அறிவிப்பொன்றை ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது ட்விட்டர் கணக்கில் இதனை நேற்று பதிவிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஆயிரத்து 400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 70 பேர் சாட்சி வழங்கியுள்ளனர்.

அந்த அறிக்கையில் சர்ச்சைக்குரிய முறி விநியோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் சிறப்பு அறிவிப்பொன்றை நாளை ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Laos national arrested with ‘Ice’ worth over Rs. 40 million

No-confidence motion against Govt. defeated

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்!!