வகைப்படுத்தப்படாத

உலங்கு வானுர்தி விபத்தில் 8 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் உலங்கு வானுர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் பலியாகினர்.

இந்தோனேசிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா மாகாணத்தில் தமாக்கங்க் மாவட்டத்தில் எரிமலை ஒன்று வெடித்துள்ளது.

இதன்போது அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கடற்படை  உலங்கு வானுர்தி ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த உலங்கு வானுர்தியே விபத்துக்கு உள்ளானது.

இதன்போது குறித்த உலங்கு வானுர்தியில் மீட்புப் பணி வீரர்கள் நான்கு பேரும், மீட்கப்பட்ட பொதுமக்கள் நான்கு பேரும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி – காரணம் இதுதானா?

Venugopal Rao retires from all forms of cricket

அனர்த்த இழப்பீடு இன்று முதல்