Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

(UTV | கொழும்பு) – ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹட்டன் ஜும்மா...
உள்நாடுசூடான செய்திகள் 1

UPDATE: தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோகம் – நாடு முழுவதும் மின் தடை!

(UTV | கொழும்பு) – UPDATE:  நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தடை காரணமாக சில பகுதிகளில் நீர் வழங்கலில் தடை ஏற்படலாம் என நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது. எனவே நீரை சிக்கனமாக பாவிக்குமாறு நீர்ப்பாவனையாளர்களை...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் கொலை என உறுதி!

(UTV | கொழும்பு) – அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் கடந்த 05ஆம் திகதி இரவு  மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை ...
உள்நாடுசூடான செய்திகள் 1

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”

(UTV | கொழும்பு) – மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. உடனடியாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த கையொப்பம் : ஐ.நாவிடன் சென்றடைந்தது

(UTV | கொழும்பு) –  பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை

(UTV | கொழும்பு) – சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு இன்று (05) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்

(UTV | கொழும்பு) –   நியாயமற்ற முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில...
உள்நாடுசூடான செய்திகள் 1

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –  இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விளையாட்டு ஹரீன்- நீர்ப்பாசனம் பவித்ராவுக்கு

(UTV | கொழும்பு) –  நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர் BE INFORMED WHEREVER...
உள்நாடுசூடான செய்திகள் 1

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்

(UTV | கொழும்பு) – உண்மையான பௌத்தர்களாகிய நாம் நாட்டையும் நாட்டு மக்களையும் மாண தலைமுறையையும் போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினூடாக சம்புத்த சாசனம் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அது நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் உண்மையான போதனைகளின் அடிப்படையில் நடைமுறை ரீதியான பௌத்த விழுமியத்தைக் கட்டியெழுப்புவது காலத்தின் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள மத வழிபாட்டுக் கட்டமைப்பைப் பாதுகாத்து அதன் மூலம் கலாசாரத்தைப் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்றும்,மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது போலவே ஒவ்வொரு கிராமம் பூராகவும் பரவியுள்ள மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையையும் ஒழிக்க வேண்டும் என்றும், உண்மையான மக்கள் சமூகமாக திகழ  வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின பின்கம புன்னிய உற்சவ நிகழ்வில் நேற்றைய தினம் இரவு (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். போதை பிசாசு பாடசாலை மாணவ சமூகத்தை கூட வேகமாக ஆட்கொண்டுள்ளதாகவும்,இவ்வாறான வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் பேரில் கிராமம் நகரம் தோறும் சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் பியர் உரிம பத்திரங்கள் வழங்குவது வருந்தத்தக்க விடயம் என்றும்,அரசாங்கத்தின் மீதும் அழுத்தம் கொடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிகரெட் மற்றும் மது விநியோகம் செய்கின்றன என்றும்,சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மேலே செல்லும் இந்த பெரும் மாபியா சக்தி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். முப்பது வருடகால யுத்தத்தினால் நாடு பாதிக்கப்பட்டது போன்று போதைப்பொருள் பயங்கரவாதத்தினால் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும்,இதிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது அன்புக்குரிய பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச ஆகியோரின் புன்னிய உபகாரத்தில் தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின புன்னிய உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්...