வகைப்படுத்தப்படாத

பிரதமர் தலைமையில் மாடிக் குடியிருப்புத் தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – தொழில்வாண்மையாளர்களுக்கான  மாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்று பன்னிப்பிட்டியில் நிர்மாணிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதன் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஆரம்பமாகின.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த மாடி வீட்டுக் குடியிருப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படுகிறது.

இதற்காகவென 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது;. பெருநகர மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுஇ நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்துகிறது.

குடியிருப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு முழுவதும் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

Related posts

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் விரைவில்

Letter distribution recommences

Gusty winds and showers to continue over the island