உள்நாடு

ஓடும் பஸ்ஸில் பெண்ணின் தலை முடியை வெட்டிய ஒருவர் கைது – கண்டியில் சம்பவம்.

27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருத்தலாவ பிரதேச பள்ளி ஒன்றைச் சேர்ந்த மௌலவி என சந்தேகிக்கப்படும் நபரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில் குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த இந்த நபர் பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேகநபரையும், அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ செய்துள்ளார்.

மடவளை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸிலேயே இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்,

பஸ் பயணிகள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts

சுகாதார விதிமுறைகளை மீறிய 47 பேர் கைது

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது – உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor

சிவனொளிபாத மலை யாத்திரை : விசேட வர்த்தமானி