வகைப்படுத்தப்படாத

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்ய விசேட சுற்றுநிருபம்

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன.னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தடையாக  அமைந்திருப்பதாக  பெற்றோர் கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடுகளையும் ஏனைய பல விடயங்களையும் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் இந்த விசேட சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.

Related posts

‘ஓசியன் சீல்ட்’ இன்று திருகோணமலை வந்தது

கைப்பேசியை வைத்து மாணவர்கள் செய்த காரியம்!!

Meek Mill: US rapper gets new trial after 11 years