வகைப்படுத்தப்படாத

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100க்கு மேற்பட்டோர் பலி

(UTV|NIGERIA)-நைஜீரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் தொடங்கப்படும்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சீனா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

More rain in Sri Lanka likely

கள்ளக்காதலால் பயங்கரம்: கணவனை கொன்று புதைத்த மனைவி!