அரசியல்

ஜனாதிபதி தேர்தல் திகதி 17 இல் அறிவிக்கப்படமாட்டாது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான திகதி அடுத்த பதினைந்து நாட்களில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை (17) ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அன்றைய தினம் திகதி அறிவிக்கப்படாது,

அதாவது 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி உரிய திகதிகளை அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன் தேர்தல் காலம் ஆரம்பமாகும் எனவும், குறித்த திகதியிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 4 முதல் 6 வாரங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தலை செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடையில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்

Related posts

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor

ரணில் சொல்வதைச் செய்யும் தலைவர் – சம்பள அதிகரிப்பை வழங்கியே தீருவோம்

editor