வகைப்படுத்தப்படாத

குருநாகல் பள்ளிவாசல் மீதான தாக்குதல்! சந்தேக நபர்கள் சிக்கினார்கள்..

(UDHAYAM, COLOMBO) – கடந்த மே மாதம் 20 ஆம் திகதி அதிகாலை நேரம் குருநாகல் மல்லவபிடிய முஸ்லீம்  பள்ளிவாசல் மீது தாக்குதல் நடந்திய சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

குருநாகல்  காவற்துறை நிலையத்தின் விசாரணை குழுவினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 2 பேரும் பொது பலசேன அமைப்பின் உறுப்பினர்கள் என அறியவந்துள்ளதுடன், மேலும் 4 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவற்துறை மேற்கொண்டுள்ளதுடன், அவர்கள் பிரதேசத்தினை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரு உந்துருளிகள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனிடையே சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

அதிபர் டிரம்ப் ஜூலை மாதம் பிரிட்டன் செல்கிறார்

அடுத்த வேளை உணவிற்காக காத்திருக்கும் மக்கள்!!!

BCCI asks ICC to ensure no repeat of airplane messages