வகைப்படுத்தப்படாத

கடந்த வருடத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு 2.8 பில்லியன் ரூபா

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் பெறுமதி 2.8 பில்லியன் ரூபாவாகும் என்று அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக்காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,  நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பல்வேறு துறைகளில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் ஏற்றுமதி மூலமாக 7.1 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீத அதிகரிப்பாகும். 2016ம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்து 50 ஆயிரத்து 832 ஆகும். இவர்கள் மூலம் பெறப்பட்ட வருமானம் 3.4 பில்லியன் ரூபாவாகும். 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இத்தொகை 15 சதவீத அதிகரிப்பாகுமென்று  தெரிவித்தார்.

சர்வதேச சமூக அபிவிருத்தி சுட்டெண்ணுக்கு அமைவாக சார்க் நாடுகள் மத்தியில் இலங்கை முன்னணியில் காணப்படுகின்றது. கடந்த வருடத்தில் தேசிய உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அடிப்படை வசதிகளுக்கான முதலீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகளை அமைப்பதற்காக 17 பில்லியன்ரூபா ஒதுக்கீடுசெய்யப்படடதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்  பிரதியமைச்சர் துஷார இந்துநிலலும் கலந்து கொண்டார்

Related posts

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

தெற்கு அதிவேகநெடுஞ்சாலை வீதிப்போக்குவரத்து வழமைபோல்

Premier to testify before PSC on Aug. 06