வகைப்படுத்தப்படாத

ஹோட்டல் மீது மண் சரிந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

பெருநாட்டில் ஹோட்டலின் மீது மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் உள்ள ஹோட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு ஹோட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை உயிரிழந்துள்ளதுடன், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

NICs to be issued through Nuwara Eliya office from today

வெனிசுலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்