உள்நாடுபிராந்தியம்

ஹோட்டலில் தங்கியிருந்த நபரொருவர் மர்மமான முறையில் மரணம்

மாவனெல்ல, பெலிகம்மன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த 37 வயதுடைய ஒருவர் இன்று (2) காலை குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கும்புல்ஒழுவ, புடலுஓய பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப அதிகாரி ஆவார்.

இன்று காலை அவரது அறையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிவதை அவதானித்த ஹோட்டல் முகாமையாளர், குறித்த நபர் தொடர்பில் தேடிப் பார்த்தபோதே அவர் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது.

அவர் தங்கியிருந்த அறையில் இருந்து அவர் மது அருந்திவிட்டு வைத்த மதுபான போத்தல், சுமார் இரண்டு இலட்சம் ரூபா பணம், ஒரு ஜோடி காதணிகள் மற்றும் பல வகையான மருந்துகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவனெல்ல பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதோடு, மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Related posts

அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத்

editor

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் இல்லை