உள்நாடுபிராந்தியம்

ஹொரண பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது!

ஹொரண பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், தனது வீட்டின் பின்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பாறையில் புதையல் தோண்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் அவரது பேரனுடன் புதையல் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், புதையல் தோண்டும் இயந்திரம், உளிகள், கம்பி வடங்கள் மற்றும் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் வெற்றிலை களிமண் விளக்கு உள்ளிட்ட பல பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன பொலிஸாருக்கு 119 அவசர அழைப்புப் பிரிவு மூலம் கிடைத்த தொலைபேசி செய்தியைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, அந்தப் பெண்ணையும் அவரது பேரனையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை 2 ஆவது நாளாகவும் தொடர்கிறது

editor

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு

editor