அங்கொடை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் பதில் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த வைத்தியர் ஹேமந்த ரணசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வைத்தியர் ஹேமந்த ரணசிங்கவை 1 மில்லியன் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 2.5 மில்லியன் ரூபாய்க்கான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் வௌிநாட்டுப் பயணத் தடையுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
2024 ஆம் ஆண்டு சிறைச்சாலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றியபோது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.