சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் பெண் கைது

(UTV|COLOMBO)  பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் 3 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பிரதேச போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 55 வயதானவர் எனவும் அவர் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த இந்த பெண் இன்று (19) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

 

 

 

 

Related posts

ஐ. நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இன்று ஆரம்பம்

விஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவுக்கு ஆதரவு

காலி வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை