உள்நாடுபிராந்தியம்

ஹுங்கம பகுதியில் தம்பதியினர் கொல்லப்பட்ட சம்பவம் – நால்வர் கைது

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூரிய ஆயுதங்களால் தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான பிரதான சந்தேக நபர் “அதுபெலேன பிந்து” என்ற புனைப்பெயரில் அறியப்படுகிறார்.

அவர் அந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இரட்டைக் கொலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கலவரத்திற்கு காரணம் ‘நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்’ என கோசமிட்ட அடிப்படைவாதிகளே – PMD

 பற்றாக்குறையாக மருந்துகளின் பட்டியல் வெளியானது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு