விளையாட்டு

ஹிமாஷவின் சாதனையை முறியடித்த யுபுன்

(UTV | கொழும்பு) – ஜேர்மனியில் நடைபெற்று வரும் தடகள போட்டித் தொடரில் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

நேற்று(08) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் குறித்த தூரத்தை 10.16 விநாடிகளில் கடந்தே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஒட்டப்போட்டியில் புதிய சாதனையை படைத்த யுபுன் அபேகோன் இத்தாலியில் வசித்தவாறு தனது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த வருடம் ஹிமாஷ ஏஷானால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே யுபுன் அபேகோன் முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விஸ்டனின் இருபதுக்கு- 20 கனவு அணியில் மலிங்கவுக்கு இடம்

இலங்கையில் பாதுகாப்பு சிக்கல் இல்லை – சங்கக்கார உறுதி

இலங்கை அணி ஓமான் நோக்கி பயணமானது