உள்நாடு

ஹாதியா இன்றும் ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவி தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இன்றும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இவர் நேற்றைய தினம் முதல் முறையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்த நிலையில் அங்கு அவர் சாட்சியம் வழங்கவில்லை.

இந்நிலையில், சஹ்ரான் ஹசீமின் மனைவி உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘அவரவர்களுக்கிடையில் நிலவுகின்ற கலாசார உறவுகளே சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்’

ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் சுதந்திர தின வைபவம் – சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor

பிரதமரின் மீலாத் வாழ்த்துச் செய்தி