உள்நாடுசூடான செய்திகள் 1

ஹரீன், மனுஷ மீண்டும் UNPக்குள்….!

(UTV | கொழும்பு) –

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (02) நடைபெற்றபோது மனுஷ நாணயக்கார மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரை மீண்டும் கட்சிப் பதவிகளில்  அமர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரின் உறுப்புரிமையும் இதுவரை தடை செய்யப்பட்டிருந்ததாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான புறக்கோட்டை, சிறிகொத்தாவில் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் 77ஆவது கட்சி மாநாட்டை நடத்துவது மற்றும் கட்சியின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி கட்சி மாநாட்டை ஜனாதிபதியின்  தலைமையில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும்  பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதைபொருள் தடுப்பு நோக்கில் நீதி துறையுடன் இணைந்த நிகழ்வு

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில்வாய்ப்பு

மோட்டார் வாகனங்கள் வைத்திருப்போருக்கான அறிவித்தல்