உள்நாடு

ஹரின் பெர்னாண்டோவுக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் அழைப்பு

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, நாளை(28) முற்பகல் 10 மணிக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய முற்பகல் 10 மணிக்கும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கடந்த தினங்களில் வெளிநாட்டில் தங்கியிருந்ததுடன் கடந்த 21 ஆம் திகதி புதன் கிழமை நாடு திரும்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

IMF இரண்டாவது கடனுதவிக்கு அனுமதி!

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

editor

வரட்சியான காலநிலை – சில வனப்பகுதியில் காட்டுத்தீ