உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் சூரியவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் வீசிய கைக்குண்டு காரணமாக அந்த அதிகாரி காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின்போது இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர், சமீபத்தில் கொஸ்கொடவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related posts

விசேட சோதனை – 300 இற்கும் அதிகமானோர் கைது

editor

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 219 பேர் அடையாளம்

அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட விசேட விமானம்