ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை இன்று (3) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் உடல்களும் கடந்த 2023-இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலான பிறகும், ஹமாஸிடமிருந்து 20 பணயக்கைதிகள் உடல்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 8 உடல்கள் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணயக்கைதிகள் விடுவிக்கப்படும்போதும் இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பலஸ்தீனர்கள் உடல்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இதுவரை மொத்தம் 270 பலஸ்தீனர்கள் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.
