உள்நாடுபிராந்தியம்

ஹபீப் நகர் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு – அக்மீமன ரொஷான் எம்.பி பங்கேற்பு

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக பொழுதுபோக்கை கழித்து வந்த ஹபீப் நகர் கடற்கரை பகுதியில், புதிய பொழுதுபோக்கு கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (18) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வு, தேசிய மக்கள் சக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான முதல் கட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, கரையோர மூலதார மற்றும் கரையோர பேணல் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எம். துளசிதாசன் அவர்களின் மேற்பார்வையின் கீழ், மூதூர் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சப்ரான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட விருந்தினராக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அத்துடன் இதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரதம விருந்தினராக கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி எஸ். ரவிசங்கர், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.பி. மஞ்சுல, மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.பாத்திமா ரொஷானா,ஹபீப் நகர் கிராம உத்தியோகத்தர் எஸ்.எம். றிஹாஸ், ஹபீப் நகர் சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எஸ். சிராஜ், தேசிய மக்கள் சக்தியின் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எம். றிபான், மேலும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், சன சமூக அபிவிருத்தி நிலைய அங்கத்தவர்கள், ஹபீப் நகர் பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஹபீப் நகர் கடற்கரை சுற்றுலா தளமாகவும், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மையமாகவும் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

சி.ஐ.டியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

editor

பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor