உள்நாடு

ஹட்டன் விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக பலி

(UTV | கொழும்பு) -ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (24) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்ட  பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டன்பார் பகுதியைச் சேர்ந்த திருமணமான 30 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தற்போது சடலம் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சாட்சிகளை விசாரிக்க திகதி நியமனம்

மருதமுனை இரட்டைக் கொலை பாடமாக அமையுமா?