ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (29) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்கிளயார் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, வாகனத்தில் இருந்த ஒரு சிறுவன் காயமடைந்துள்ளதோடு, பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
