அரசியல்உள்நாடு

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளர் பதவி இ.தொ.கா வசம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன்
ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடலானது, மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எம்.கே.சி.கே அத்தபத்து அவர்களின் தலைமையில் இன்று(26) ஹட்டன்-டிக்கோயா நகர சபை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்கெடுப்பினூடாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுரேந்திர ஆரச்சிலாகே அசோக கருணாரத்ன 08 வாக்குகளைப் பெற்று தவிசாளரானார்.

மேலும் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் பிரதி தவிசாளராக இ.தொ.கா உறுப்பினர் பெருமாள் சுரேந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.

இதில் தே.ம.ச வேட்பாளர் 08 வாக்குகளை பெற்று தவிசாளர் ஆனதுடன்., ஐ.ம.ச வேட்பாளர் 07 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

மொத்தமாக ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்காக 15 உறுப்பினர்கள் தேர்வாகி சபை உறுப்பினர் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor

ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம்