நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (28) விமானப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், சமீபத்திய விமான நிலவரத்தை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பயணிகள் தங்கள் விமானம் தொடர்பான நிகழ்நேரத் தகவலைச் சரிபார்க்க, பின்வரும் வழிகளைப் பயன்படுத்துமாறு விமான நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது:
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள ‘விமான நிலவரம் (Flight Status)’ பிரிவைச் சரிபார்க்கவும்.
ஹொட்லைன்:
இலங்கைக்குள்: 1979
சர்வதேச அழைப்புகளுக்கு: +94 117 77 1979
