சூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி மறுசீரமைப்பு, நிறுவன மறுசீரமைப்பு மற்றும் சுயாதீன கொள்முதல் செயன்முறைகளை உறுதிப்படுத்தல் போன்ற பரிந்துரைகள் அதில் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, ராஜதந்திர, விஷேட மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்களை வீசா பெற்று கொள்வதிலிந்து விடுவிப்பதற்காக பஹ்ரேன் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்களாக பெண்கள் நியமனம்

இறக்குமதி செய்யப்படும் வாகன வரி தொடர்பில் வௌியான தகவல்

editor