சூடான செய்திகள் 1

ஸ்ரீதேவி கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை ரயில் நிலையம் வரையில் ஸ்ரீதேவி என்ற பெயரிலான கடுகதி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடவிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

4003 என்ற இலக்க இந்த ரயில் இன்று(5) காலை 3.55 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.14 மணிக்கு வவுனியா ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து அரவியர்நகர் கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

4004 என்ற இலக்க ரயில் நாளை(6) அதிகாலை 3.45 மணிக்கு காங்கேசந்துறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தை 5.49 மணிக்கு வந்தடையும்.

4003 மற்றும் 4004 இலக்கங்களைக் கொண்ட ரயில்கள் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரையில் இதுவரையில் சேவையில் ஈடுபட்டிருந்த ரயில்களே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு விசேட அறிவுறுத்தல்

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அரசு நடவடிக்கை