அரசியல்உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் தசநாயக்க எம்.பி கடமையேற்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் இன்று (05) தேசிய அமைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

T.B ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஒன்றுகூடிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னிலையில் கட்சியின் எதிர்கால அரசியல் நலனை கருத்தில் கொண்டு புதிய தேசிய அமைப்பாளர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பல கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மிஹிந்தலை பன்சலையின் 41 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை செலுத்திய சஜீத் பிரேமதாஸா!

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு!