சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.க – அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் இடையே அவசர சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் ஆலோசனைகளை பெறுவது குறித்த கலந்துரையாடலின் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் செயற்பட வேண்டிய விதம் குறித்து ஆராய நாளை சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது !