வகைப்படுத்தப்படாத

ஸ்காட்லாந்து போலீஸை அலறவிட்ட ‘புலி’

(UTV|SKOT LAND)-கடந்த சனிக்கிழமை இரவு, அபெர்டீன்ஷரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மாட்டு கொட்டகையில் புலி ஒன்றை பார்த்ததாக பதற்றத்துடன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பல வாகனங்களுடன் ஆயுதமேந்திய போலீசார் ஹேட்டன் அருகிலிருக்கும் அந்த பண்ணைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், வன உயிரின பூங்கா ஒன்றை தொடர்பு கொண்ட போலீசார் அங்கு புலி எதேணும் தப்பியோடியுள்ளதா என்ற விவரத்தையும் கேட்டு விசாரித்துள்ளனர்.

இந்த தவறான எச்சரிக்கை, அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியதாக ஸ்காட்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.கிடைத்த தகவலையடுத்து ஆயுதமேந்திய போலீசார் அனுப்பபட்ட நிலையில், அது வெறும் பொம்மை புலி என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

 

Related posts

சட்டம் தன் கடமையை செய்யும்

10-Hour water cut shortly

மட்டகளப்பு-மன்னார் பிதேச சபைக்கான  உத்தியோகபூர்வ முடிவுகள்