அரசியல்உள்நாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாளிகைக்காட்டில்!

காரைதீவு பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான  எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நேற்று (12) மாளிகைக்காட்டில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், காரைதீவு பிரதேச சபையின் மரச்சின்ன வேட்பாளர்களான எம்.எச்.எம். நாசர், எப்.எம்.ரௌபி, பட்டியல் வேட்பாளர்கள் மற்றும் மாளிகைக்காடு பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

-மாளிகைக்காடு செய்தியாளர்

Related posts

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து

விண்கல் மழையை காண இலங்கையர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்