சூடான செய்திகள் 1

ஶ்ரீ.ல.சு.க மறுசீரமைப்பு ஜனவரியில்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும்இடையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொகுதி அமைப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது புகையிரத பணிப்புறக்கணிப்பு

71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி