சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சு.கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை(13) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக கட்சி செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 341 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் கட்சி செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

டொனால்டு ட்ரம்புக்கு மைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன?

Shafnee Ahamed

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான இரு மனுக்கள் பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் நாடு கடத்தப்பட்டார்