கிசு கிசு

வைரஸ்கள் 3 மாத காலம் உடலில் ஒளிந்திருக்கும்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தபின்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் மீண்டும் வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பான் டோக்கியோவில் கடந்த பெப்ரவரி மாதம் 70 வயதைக் கடந்த ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இயல்பு வாழ்வை ஆரம்பித்தார். பொதுப் போக்குவரத்து வசதிகளையும்கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.

சில வாரங்கள் கழித்து, அவர் மறுபடி நோயுற்று அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 பரிசோதனையின் போது, நோய் அறிகுறிகள் இல்லை என அறியப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 14 சதவீதம் பேருக்கு வேறொரு சமயத்தில் நடைபெறும் சோதனையின் போது, நோய் அறிகுறி கண்டறியப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இது இரண்டாவது தாக்குதல் அல்ல என்றும், `முதல் வைரஸ் தொற்றே திருப்பித் தாக்கும் நிகழ்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது, உடலில் எங்காவது ஒளிந்திருக்கும் வைரஸ் மீண்டும் மேலே வருகிறது” என்று ஸ்பானிய தேசிய பயோடெக்னாலஜி மையத்தின் நச்சுயிரியல் நிபுணர் லூயிஸ் என்ஜுவானெஸ், குறிப்பிடுகிறார்.

உடலில் வைரஸ் ஒளிந்திருக்கலாம் சில வைரஸ்கள் நம் உடலில் 3 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் ஒளிந்திருக்கும் எனவும் தெரிவிக்கபப்டுகின்றன.

எனவே ஆய்வாளர்களுக்கு புதிராக இருக்கும் சில விடயங்கள் கொவிட் – 19ல் உள்ளன. ஒருவர் கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு, மீண்டும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு இடைப்பட்ட காலம்தான் புரிந்து கொள்ள முடியாத விடயமாக உள்ளது என கூறப்படுகிறது.

Related posts

மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்?

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது

அமைச்சுப் பதவியை ஏற்க மறுக்கும் ‘சமல்’