உள்நாடு

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, சாவகச்சேரி வைத்தியசாலையின் நிர்வாக நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடமாகாண வைத்தியர்கள் குழு ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இன்று (16) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் ஏனைய வைத்தியர்கள் தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா அண்மையில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

கடந்த வாரம் விடுமுறையில் சென்றிருந்த அவர், நேற்று (15) சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மீளத் திரும்பியதையடுத்து குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பான வழக்கொன்று இன்று விசாரிக்கப்பட்டபோது, சாவகச்சேரி வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் செயற்படக் கூடாது என வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சாவகச்சேரி நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

எரிபொருள் பெறும் அனைவருக்கும் காஞ்சனவிடமிருந்து விசேட அறிவித்தல்

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது

editor

நாமல் குமாரவின் தொலைபேசி, பணம் கொள்ளை: உரியவர்கள் கைது