உள்நாடு

வைத்தியராக நடித்து பெண்களை ஏமாற்றிய நைஜீரியப் பிரஜை கைது !

(UTV | கொழும்பு) –

வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளை கணினி குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்து இருவரும் 3 பெண்களிடமும் பல இலட்சம் ரூபாக்களை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே நைஜீரியப் பிரஜை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் வைத்தியர்கள் போல் நடித்து சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பண மோசடி செய்துள்ளனர். மேலும் கார் ஒன்றை வென்றுள்ளதாகவும் அந்தக் காரின் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இந்த நைஜீரியப் பிரஜைகள் மற்றொரு பெண்ணிடம் பண மோசடி செய்துள்ளனர். இந்த மோசடிகள் வெவ்வேறு 3 சம்பவங்களில் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும் போது அவர்களிடமிருந்து 14 ஏடிஎம் கார்ட்கள் மற்றும் 6 கையடக்கத் தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வேலை நிறுத்தம் மீளப்பெற்றது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது