தான் வைத்தியர் என மக்களை நம்ப வைத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக தான் வைத்தியர் என நடித்து வந்த நிலையிலேயே இவர் (22) வியாழக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானத் துறையில் கல்வி கற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேவதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-ஓட்டமாவடி நிருபர் எச். எம். எம். பர்ஸான்
