உள்நாடு

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பாடகி சுஜீவா

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக வந்த போது இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கே. சுஜீவா பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு,  கட்டண வார்டில் சிகிச்சை பெற்று, தற்போது வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையால் இதுவரை 25 பேர் உயிரிழப்பு

A/L இற்கு பின்னர் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

இலங்கை வருகிறார் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

editor