உள்நாடு

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது!

(UTV | கொழும்பு) –

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 83 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினர் ஒருவரைக் கைது செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினராலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இராஜகிரிய, புத்கமுவ வீதியைச் சேர்ந்த நபரே ருமேனியாவில் தொழில் வழங்குவதற்காக 813,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், அவர் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் பணியகத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு மேலதிகமாக சந்தேக நபருக்கு எதிராக பணியகத்துக்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்  

சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

நிதிச் செயலாளருக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு!